அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும்
பெரியார் பிறந்த நாளை அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர்,
பெரியார் பிறந்த நாளை அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
சமூக நீதி நாள்
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி சமூகநீதிநாளாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். பெரியார் பிறந்த நாள் அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட வேண்டியது அவசியமாகும். இதுகுறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அம்மாநில முதல்-அமைச்சர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
மகாகவி பாரதியாருக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், தி.மு.க. ஆட்சி காலத்திலும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதுகுறித்து எதுவும் தெரியாமலேயே பேசி வருகிறார்.
மதிப்பதில்லை
பாராளுமன்றம் தொடங்கி பாராளுமன்ற மாண்பை காக்காமல் தற்போது நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை யடையும்நிலையில் முடிவடைந்துள்ளது. இதைத்தான் ராகுல்காந்தி கூறி வருகிறார். அவர் கூறுவது உண்மையாகிவிட்டது.
நீட் தேர்வு தள்ளி வைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறி வருகிறார். அதற்கு காரணம் தற்போது உள்ள நோய் பரவும் சூழ்நிலை தான். காங்கிரஸ் பொய் அரசியல் செய்து வருவதாக பா.ஜ.க. கூறுவது ஏற்புடையது அல்ல. யார் பொய் அரசியல் செய்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் கமிஷனர் சையது முஸ்தபா கமாலுடன் நகரில் நடைபெற்று வரும் தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள்குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை திறந்து வைத்தார். குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு வேன் பிரசாரத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, முன்னாள் நகரசபை துணை தலைவர் பாலகிருஷ்ணன் சாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story