சேலம் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 57 பேருக்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 10 பேர் பாதிக்கப்பட்டனர்.
மகுடஞ்சாவடியில் ஒருவர், காடையாம்பட்டி, மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டியில் தலா 2 பேர், நங்கவள்ளியில் 3 பேர், கொளத்தூரில் 4 பேர் பாதிப்படைந்தனர். பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவர், ஆத்தூர், தலைவாசலில் தலா 2 பேர், அதே போன்று ஆத்தூர் நகராட்சியில் 2 பேர், மேட்டூர் நகராட்சியில் 5 பேர் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 14 பேர் உள்பட மொத்தம் மாவட்டத்தில் 57 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தனர்.
இது வரை மாவட்டத்தில் 96 ஆயிரத்து 543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 94 ஆயிரத்து 315 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பலியானார். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,639 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story