சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது


சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2021 3:03 AM IST (Updated: 8 Sept 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,
ரேஷன் அரிசி
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், பாரதிராஜா மற்றும் போலீசார் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு லாரியில் இருந்து மற்றொரு வேனில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசியை மாற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 40), அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (42), அஜித் (24), என்பதும், வெளிமாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துடன், அவர்களிடம் இருந்து 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு லாரி, ஒரு வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாவிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story