சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் சரக்கு போக்குவரத்து-பார்சல் மூலம் ரூ.23 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல்


சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் சரக்கு போக்குவரத்து-பார்சல் மூலம் ரூ.23 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 8 Sept 2021 3:03 AM IST (Updated: 8 Sept 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று காலத்திலும் இடைவிடாத சேவையால் சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து மற்றும் பார்சல் மூலமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.23 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூரமங்கலம்,
சரக்கு போக்குவரத்து
சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து ரெயில்களில் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்து மற்றும் பார்சல் மூலமாக சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயே ரெயில்வே நிர்வாகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 476 டன் சரக்கு அனுப்பி வைத்து ரூ.21.19 கோடி வருவாயை ஈட்டி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு் மாதம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 237 டன் சரக்கு அனுப்பி வைத்ததன் மூலம் ரூ.18.77 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. 
வருவாய் கூடுதல்
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சரக்கு போக்குவரத்து அனுப்பி வைத்ததை விட இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சரக்கு அனுப்பி வைத்தது 14.38 சதவீதம் கூடுதல் ஆகும். இதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் வருவாய் 12.86 சதவீதம் என்பது கடந்த ஆண்டை விட கூடுதல் ஆகும். 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சரக்கு போக்குவரத்திற்காக 134 ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 190 சரக்கு போக்குவரத்து ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த சரக்கு போக்குவரத்து ரெயில் மூலமாக பெட்ரோலியம், சிமெண்டு, இரும்பு மற்றும் கோதுமை, தானியங்கள் மற்றும் கன்டெய்னர்கள் அனுப்பப்பட்டன.
பார்சல்
இதேபோல் சேலம் ரெயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பார்சல் அனுப்புவதன் மூலமாக சுமார் 3 ஆயிரத்து 365 டன் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 69 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் சுமார் 1,927 டன் பார்சல் அனுப்பப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 81 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 74.59 சதவீத பார்சல் கூடுதலாக அனுப்பப்பட்டு 81.48 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காலத்திலும் இடைவிடாத சேவையால் சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சரக்கு போக்குவரத்து மற்றும் பார்சல் மூலமாக ரூ.23 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story