தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 236 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 248 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story