நிர்மலா சீதாராமனுடன் பசவராஜ் பொம்மை சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பசவராஜ் பொம்மை டெல்லியில் சந்தித்தார்.
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இதுபற்றி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் நபார்டு மற்றும் சிறுதொழில் வளர்ச்சி வங்கி ஆகியவை மூலம் மேற்கொள்ளப்படும் ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ திட்டத்திற்கு கடன் அளிக்கவும், மேலும் பல திட்டங்களுக்கு கடனுதவி வழங்கவும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டேன்.
அதன்பேரில் நபார்டு மற்றும் சிறுதொழில் வளர்ச்சி வங்கி அதிகாரிகளுக்கு தக்க வழிகாட்டுதல்களை அளித்து அதை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார். மேலும், நிர்மலா சீதாராமனிடம் கர்நாடக மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரிக்கான இழப்பீட்டு நிலுவை தொகையை அளிக்க வேண்டியும் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story