மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா
மைசூரு பல்கலைக்கழக 101 பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
மைசூரு: மைசூரு பல்கலைக்கழக 101 பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
மைசூருவில் அமைந்துள்ள மைசூரு பல்கலைக்கழகம் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரால் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் மைசூரு பல்கலைக்கழகத்தின் 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உயர் கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், பல்கலைக்கழக துணைவேந்தர் ஹேமந்த்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு...
பின்னர் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 350 மாணவ-மாணவிகள் தங்கப்பதக்கமும், ஆராய்ச்சி படிப்பை முடித்த 250 பேருக்கு டாக்டர் பட்டத்தையும் கவர்னர் வழங்கினார். மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவர்னர் தாவர்சந்த் கெலாட் அவர்களை பாராட்டினார்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்த உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்த சைத்ரா நாராயண் என்ற மாணவி, பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வாங்கினார்.
200 பேர் வீதம்...
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவ-மாணவிகள் மொத்தமாக அனுமதிக்கப்படவில்லை. விழா நடந்த அரங்கிற்குள் 200 மாணவர்கள் வீதம் அழைக்கப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. முதல் 200 பேருக்கு பட்டம் வழங்கிவிட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னா் மாலை வரை நடந்த நிகழ்ச்சியில் மந்திரி அஸ்வத் நாராயண், மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் மூலமாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது அல்லது மாணவ-மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் நேரிடையாக வந்து பட்டங்களை பெற்று கொள்ளலாம் என்று மைசூரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
20 தங்கப்பதக்கங்களை பெற்ற மாணவி
மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சைத்ரா நாராயண் என்ற மாணவி, பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த சைத்ரா நாராயண், உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவருடைய கிராமத்துக்கு காலை ஒன்றும், மாலை ஒன்றுமாக மொத்தமே 2 பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. அந்த பஸ்சில் தான் சைத்ரா நாராயண் சிர்சிக்கு வந்து பி.யூ.சி. படித்தார். பின்னர் அவர் மைசூரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலையும், முதுகலையும் படித்தார். முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து வந்து, சைத்ரா நாராயண் 20 தங்கப்பதக்கங்களை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story