மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சுதந்திர தினத்தன்று மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: சுதந்திர தினத்தன்று மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி மாணவன் சாவு
கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று துமகூரு மாவட்டம் கரிகெரேயில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின் கம்பத்தை சரிசெய்தபோது மாணவர் சந்தன் (வயது15) மின்சாரம் தாக்கி இறந்தான். இது தொடர்பாக கர்நாடக ஐகோாட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்கை தாக்கல் செய்து கொண்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் துமகூரு மாவட்ட கலெக்டர் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மாணவர்களே தாமாக முன்வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் நிவாரணம்
அதற்கு நீதிபதிகள், "பொதுவாக பள்ளி ஆசிரியர்கள் உத்தரவின்பேரில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபடுகிறார்கள். கலெக்டரின் அறிக்கையை பார்த்தால், பள்ளி ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் தெரிகிறது. கர்நாடகத்தில் பள்ளி வளாகங்களில் இருக்கும் மின் கம்பங்களை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கர்நாடக மின்சார கழகத்திற்கு நோட்டீசு அனுப்ப வேண்டும்.
மேலும் மின்சாரம் தாக்கி இறந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு ரூ.1 லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. கொப்பல் சம்பவத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது. அதே போல் துமகூரு மாணவனின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கூறினர்.
Related Tags :
Next Story