நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லை:
மானூர் தாலுகா தெற்கு செழியநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணிசுடலை தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தெற்கு செழியநல்லூர் குளத்தை தூர்வாராமல் தூர்வாரி குடிமராமத்து செய்ததாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
..................
Related Tags :
Next Story