சங்கரன்கோவில்: செல்போன் திருடிய 3 பேர் கைது
செல்போன் திருடிய 3 பேர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள மாங்குடியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் சம்பவத்தன்று பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜெயஆனந்த் (25) என்பவர் வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருந்த செல்போனைத் திருடினார். அப்போது, சத்தம் கேட்டு நீலகண்டன் விழித்து வெளியே வந்து பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (24), அந்தோணி (23) ஆகியோர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். நீலகண்டன் சத்தம் போட்ட உடன் 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீலகண்டன் அளித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயஆனந்த், பாலமுருகன், அந்தோணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்
Related Tags :
Next Story