புதுச்சேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை


புதுச்சேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 8 Sept 2021 3:48 AM IST (Updated: 8 Sept 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி, செப்.8-
புதுச்சேரி குயவர்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் உதயகுமாரி (வயது 31). கால்நடை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர். இவருக்கும் கண்டமங்கலம் பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த பாலாஜி (33) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 
திருமணத்துக்கு பின் மேட்டுப்பாளையத்தில் தனி வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உதயகுமாரி, கணவரை பிரிந்துச்சென்று பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவர், கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று உதயகுமாரி பரிதாபமாக பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story