மின்கம்பத்தில் சரக்கு ஆட்டோ மோதல்; டிரைவர் படுகாயம்
மின்கம்பத்தில் சரக்கு ஆட்டோ மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணராயபுரம்,
திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி சென்றார். கரூர்-திருச்சி சாலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த டிரைவர் விசுவநாதனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது. இதனால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story