குரங்குகளை பிடிக்க நடவடிக்கை
குரங்குகளை பிடிக்க நடவடிக்கை
பொங்கலூர்
பொங்கலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக 3 குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. இந்த குரங்குகள் காட்டூர் ரோடு கண்டியம்மன்கோவில் பகுதி கடைகளில் புகுந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்கிறது. மேலும் அந்த பகுதியில் செல்வோரை பயமுறுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து நேற்றுதினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வனவர் திருநாவுக்கரசு மற்றும் மான் காவலர் மணிகண்டன் ஆகியோர் பொங்கலூர் வந்தனர். பின்னர் குரங்குகள் சுற்றி வரும் பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த 3 குரங்குகளும் கண்டியம்மன் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சுற்றி வருவதைக் கண்டனர். அங்கு சென்ற அவர்கள் அதற்கு தின்பண்டங்களை கொடுத்து அருகில் சென்றனர். பின்னர் அவைகளை பிடிக்க முயன்றபோது தப்பியோடியது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, இதேபோல் இரண்டொரு நாட்கள் குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுத்து பழகியபின் பிடிக்க முயற்சி செய்யப்படும் என தெரிவித்தனர். விரைவில் குரங்குகள் பிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
---
Image1 File Name : 6120821.jpg
----
Reporter : V.P. Jeganathan Location : Tirupur - Pongaloor
Related Tags :
Next Story