ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
வெள்ளகோவில்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 11, 12 ம் வகுப்புகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 6 முதல் 10 ம் வகுப்புகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 3வது கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி 5 நாள் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியானது வெள்ளகோவில் ஒன்றியத்திலுள்ள 4 உயர்நிலைப் பள்ளிகளிலும், 4 மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித் துறையினர் செய்தனர்.
Related Tags :
Next Story