மேம்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி
மேம்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக அவினாசி சாலை இருந்து வருகிறது. இதன் அருகில் ரெயில் நிலையம் உள்ளது. இதனால் அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் ரெயில்வே துறை சார்பில் 4 தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில ஆண்டுகள் ஆன நிலையில், இதனை புதுப்பிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது பழமையான இந்த தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் முடிந்ததும், புதிய சுவர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும். கட்டுமான பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விளம்பர பதாகையும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பணிகள் முடியும் வரை கவனமாக செல்ல வேண்டும் எனவும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story