சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலம்
சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலம்
திருப்பூர், செப்.9-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகள் 4 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோல் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.
இருப்பினும் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் ராமநாதபுரம் 2வது வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பதால், கழிவுநீர் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சாக்கடை கால்வாய் அருகே குடிநீர் குழாயும் இருக்கிறது. இதனால் குடிநீருடன், கழிவுநீரும் கலக்கும் அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். தினமும் அந்த பகுதியை கண்காணிக்க வேண்டும்.
Related Tags :
Next Story