தூத்துக்குடியில் உப்பள அதிபர் வீட்டில் தங்கநகை, வெள்ளி பொருட்கள் திருட்டு மர்மநபருக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் உப்பள அதிபர் வீட்டில் தங்கநகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி;
தூத்துக்குடியில் உப்பள அதிபர் வீட்டில் தங்கநகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உப்பள அதிபர்
தூத்துக்குடி தனசேகர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). உப்பள அதிபர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிவகாசிக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவை திறந்து கிடந்தன.
பீரோவில் இருந்த சுமார் 5 பவுன் கம்மல், வளையல் உள்ளிட்ட தங்கநகைகளும், வெள்ளி குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் உள்ளிட்ட 2 கிலோ வெள்ளி பொருட்களும் திருடப்பட்டு இருந்தன. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர், வீட்டின் மாடியில் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பொருட்களை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக செந்தில்குமார் தூத்துக்குடி சிப்காட் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story