ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். தமிழக அரசு 1 1 2020 முதல் முடக்கப்பட்டுள்ள 11 சதவீதம் அகவிலைப்படியை 1 7 2021 முதல் முன்தேதியிட்டு உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து நோய்களுக்கும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இல்லாமல் சிகிச்சைக்கான முழு செலவையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது, மாவட்ட தலைவர் சண்முகம், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்க மாவட்ட தலைவர் நாட்ராயன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story