தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது


தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 8 Sept 2021 5:01 PM IST (Updated: 8 Sept 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

திருப்பூர், செப்.9-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. 
15 லட்சத்தை நெருங்கியது 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 ந்தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 
முதலில் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டிய பொதுமக்கள், இதன் பின்னர் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 69 ஆயிரத்து 78 என 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. 
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
இதில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 12 லட்சத்து 44 ஆயிரத்து 123 பேரும், 2 வது டோஸ் செலுத்தியவர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 955 பேர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 998, பெண்கள் 7 லட்சத்து 1,850. மேலும், கோவிஷீல்டு செலுத்தியவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 25 ஆயிரத்து 849. 
கோவேக்சின் செலுத்தியவர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 949. இதுபோல் தடுப்பூசி செலுத்தியவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 401, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 60 ஆயிரத்து 840, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 837 ஆகியோர் அடங்குவர். 
---------



Next Story