சாயர்புரம் அருகே புகையிலை விற்றவர் கைது


சாயர்புரம் அருகே புகையிலை விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2021 5:01 PM IST (Updated: 8 Sept 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்

சாயர்புரம்:
சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சாயர்புரம்அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாண்டில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் ஓட ஆரம்பித்தார். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஐயர்விலையை சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கரசேகர் (வயது47) என்பதும், அந்த பகுதியில் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 250 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தன. இது தொடர்பாக சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரசேகரை கைது செய்தனர்.

Next Story