தம்பதி குண்டர் சட்டத்தில் கைது


தம்பதி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Sept 2021 5:20 PM IST (Updated: 8 Sept 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய தம்பதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர், செப்.9-
திருப்பூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய தம்பதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தம்பதி 
திருப்பூர் பி.என்.ரோட்டில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தப்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த மாதம் 23 ந் தேதி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மசாஜ் சென்டர் உரிமையாளரான கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ராஜேஷ் வயது 36, அவரது மனைவி அனு28 ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டு உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், ராஜேஷ், அனு ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கோவை மத்திய சிறையில் உள்ள கணவன், மனைவி இருவரிடம் நேற்று வழங்கினார். இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

----
Reporter : M.Sivaraj_Staff Reporter  Location : Tirupur - Tirupur

Next Story