திருமணம் ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Sept 2021 5:40 PM IST (Updated: 8 Sept 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே திருமணம் ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே திருமணம் ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் நாட்டறம்பள்ளியை அடுத்த மாமுடிமானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சென்னகேசவன். இவரது மகள் லில்லிஸ்வரி (வயது 29). எம்.சி.ஏ. முடித்துவிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

கொரோனா காலத்தில் வில்லிஸ்வரி தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அதன் பிறகு வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார்.

லில்லிஸ்வரிக்கு அவரது பெற்றோர்கள் கடந்த சில வருடங்களாக வரன் தேடி வந்தனர். பல இடங்களில் வரன் தேடியும் இதுவரை வரன் அமைய வில்லை.

 இதனால் வில்லிஸ்வரி மன வேதனையில் காணப்பட்டார். பல வருடங்களாக பெற்றோர்கள் வரன் தேடியும் திருமணம் நடக்காததால் மனமுடைந்த அவர் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சென்னகேசவன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story