தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் கோர்ட்டு நாளைமறுநாள் நடக்கிறது


தூத்துக்குடி மாவட்டத்தில்  தேசிய மக்கள் கோர்ட்டு  நாளைமறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Sept 2021 6:30 PM IST (Updated: 8 Sept 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் தேசிய மக்கள் கோர்ட்டு நடக்கிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேசிய மக்கள் கோர்ட்டு நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான வி.தங்கமாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்கள் கோர்ட்டு
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் வரும் 11.09.2021 அன்று தேசிய மக்கள் கோர்ட்டு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தாலுகா சட்டப்பணிகள் குழுக்கள் மூலமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேசிய மக்கள் கோர்ட்டு நடக்கிறது.
மேல்முறையீடு கிடையாது
மக்கள் கோர்ட்டில் சமாதானமாக முடிக்கப்படும் வழக்குகளில் அன்றைய தினமே உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு கிடையாது. நீதிமன்ற முத்திரை கட்டணம் கிடையாது. எனவே நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேசிய மக்கள் கோர்ட்டில் வழக்குதாரர்கள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், காப்பீடு நிறுவனத்தினர், போலீசார் மற்றும் அனைத்து அரசு துறையினர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story