ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்காடு
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு மேட்டுத் தெரு அருகே முட்புதரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஆற்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த பாலாஜி (வயது 28) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story