மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியல் விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம்
1. ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 7, 8, (எஸ்.சி. பெண்கள்)
2. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 9 (பெண்கள் பொது)
3. கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 28 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 27 (பெண்கள் பொது)
4. மயிலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 6 (எஸ்.சி. பொது), வார்டு எண் 5 (பெண்கள் பொது)
5. முகையூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 15 (எஸ்.சி. பொது), வார்டு எண் 13, 14 (பொதுப்பிரிவினர்)
6. வானூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 21, 22 (எஸ்.சி. பொது), வார்டு எண் 20 (பெண்கள் பொது)
7. மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1, 2 (பெண்கள் பொது)
8. செஞ்சி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 11 (பெண்கள் பொது), வார்டு எண் 12 (பொதுப்பிரிவினர்)
9. விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 19 (பெண்கள் பொது), வார்டு எண் 18 (பொதுப்பிரிவினர்)
10. கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 23, 24 (பெண்கள் பொது)
11. வல்லம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3, 4 (பொதுப்பிரிவினர்)
12. காணை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 16, 17 (பொதுப்பிரிவினர்)
13. திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 25, 26 (பொதுப்பிரிவினர்)
கள்ளக்குறிச்சி மாவட்டம்
1. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10 (எஸ்.டி. பெண்கள்)
2. சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 12 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 11 (பொதுப்பிரிவினர்)
3. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 13, 14 (எஸ்.சி. பெண்கள்)
4. உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 17 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 15, 16 (பெண்கள் பொது)
5. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 4 (எஸ்.சி. பொது), வார்டு எண் 3 (பெண்கள் பொது), வார்டு எண் 5 (பொதுப்பிரிவினர்)
6. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 8, 9 (எஸ்.சி. பொது)
7. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1, 2 (பெண்கள் பொது)
8. திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 6, 7 (பொதுப்பிரிவினர்)
9. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 18, 19 (பொதுப்பிரிவினர்)
Related Tags :
Next Story