21 பேருக்கு மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி
சமூகநீதி போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம்,
தமிழகத்தில் வன்னியர் சங்கம் சார்பில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த 1987-ம் ஆண்டில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படையில் சமூகநீதி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் கூட்டுசாலை அருகில் இடம் தேர்வு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பரிதி, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story