செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்


செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Sept 2021 8:50 PM IST (Updated: 8 Sept 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பை கென்னடி நகர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் ராஜதானி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும், டிராக்டர்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடினர். 


உடனே போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் பாலக்கோம்பையை சேர்ந்த வெங்கடேசன், குருநாதன் என்றும், அவர்கள் அனுமதியின்றி செம்மண்ணை டிராக்டர்கள் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story