திருக்கோவிலூர் பகுதியில் 2 மாணவிகள் திடீர் மாயம்


திருக்கோவிலூர் பகுதியில் 2 மாணவிகள் திடீர் மாயம்
x
தினத்தந்தி 8 Sept 2021 9:16 PM IST (Updated: 8 Sept 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் 2 மாணவிகள் திடீர் மாயம் போலீசார் தீவிர விசாரணை

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று வருவதாக கூறி சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. 

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். 
அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்

Related Tags :
Next Story