மின் மோட்டாரை திருடியவர் கைது


மின் மோட்டாரை திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2021 10:10 PM IST (Updated: 8 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கடையில் மின் மோட்டாரை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை: 

வடமதுரை சத்தியா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 51). இவர் அதே பகுதியில் மோட்டார் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். கடந்த 5-ந்தேதி இவருடைய கடையில் இருந்த மின்மோட்டார் திருடு போனது. இது குறித்து சந்திரசேகர் வடமதுரை போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை சோதனையிட்டபோது, மர்ம நபர் ஒருவர் மின்மோட்டாரை திருடிச் செல்வது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மின்மோட்டாரை திருடிச்சென்றது மூக்கையகவுண்டனூரை சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார்  கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story