கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 Sept 2021 10:21 PM IST (Updated: 8 Sept 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், சத்திய சுகம் முகாமிற் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரிய பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்யது ரைத்தீன், லிவிங்ஸ்டன், வசந்த பிரியா, கிஷோர் பன்னீர் செல்வம் ஆகியோர் 101 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதார ஆய்வாளர் இளையராஜா, சுகாதார செவிலியர்கள் சாந்தி, பத்மாவதி, நிஸாமா, ரேவதி மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story