வள்ளலாரில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை
ஆக்கிரமிப்பு வீடுகளில் குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை
வேலூர்
வேலூர் வள்ளலார் எஸ்.டைப் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் கடந்த 4-ந் தேதி அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பலர் தங்களின் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். அதனால் அந்த வீடுகள் அகற்றப்படவில்லை. அவற்றின் சுற்றுச்சுவர் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த தூண்கள் இடித்து அகற்றப்பட்டன.
மேலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவற்றை காலி செய்ய வேண்டும். வீடுகள் ஓரிருநாளில் இடித்து அகற்றப்படும் என்று வேலூர் தாசில்தார் செந்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் 8 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர், மின்இணைப்பை துண்டிக்கும்படி வேலூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் சத்துவாச்சாரி கிழக்கு மின்வாரிய அலுவலகத்துக்கு நேற்று வருவாய்த்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த வீடுகளின் குடிநீர், மின்இணைப்பு இன்று (வியாழக்கிழமை) துண்டிக்கப்படும் என்றும், அதன்பின்னரும் வீட்டை காலி செய்யாவிட்டால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து அந்த வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story