பண்ணை குட்டை அமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பு


பண்ணை குட்டை அமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 10:27 PM IST (Updated: 8 Sept 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

குறுங்காடுகளுக்காக பண்ணை குட்டை அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டது.

தொண்டி, 
திருவாடானை யூனியன் வெள்ளையபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிஅளிப்பு திட்டத் தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் உடையன சமுத்திரம் ஆகிய இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ஊராட்சியில் கீழக் குறிச்சி செல்லும் வழியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மரக் கன்றுகள் நடப் பட்டு அடர்காடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் வேம்பு, புளி, புங்கை, தேக்கு, ஆலமரம், அரச மரம், அத்தி நாவல போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள்  நடப்பட்டு தினமும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றுதல், வேலி அமைத்தல், கன்றுகள் பரா மரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இப் பகுதியில் 2 பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டு மழை நீரை சேமித்து மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றப் படுகிறது. தற்போது மரக் கன்றுகள் சுமார் 2 அடி உயரம் முதல் 5 அடி உயரம் வரை வளர்ந்து பசுமை சோலையாக காட்சி அளிக்கிறது. இங்கு அடர்காடு அமைக்கப்பட்டு பரா மரிக்கபட்டு வருவதை திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகபெருமாள், பாண்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் முடியப்பதாஸ் ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மிகச் சிறப்பான முறையில் அடர்காடு உருவாக்கி உள்ள ஊராட்சி தலைவர் பரக்கத் அலிக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர் கற்பகம், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய ஊரக வேலை உறுதிஅளிப்பு திட்டபணியாளர்கள் ஆகியோரை பெரிதும் பாராட்டினர். 
இதுகுறித்து ஊராட்சி தலைவர் பரக்கத் அலி கூறுகையில் ஊராட்சியில் உள்ள காலி இடங்களில் மரக் கன்றுகள் நடப்பட்டுபராமரிக்க ஊராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

Next Story