கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 Sept 2021 11:07 PM IST (Updated: 8 Sept 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

திருப்புவனம், 
மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்படியும், சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர். ராம்கணேஷ் அறிவுரையின்படி திருப்புவனம் நகரில் தொடர்ந்து பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுபோல் வாரச் சந்தையிலும், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்திலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சேதுராமு தலை மையில் 180 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.சாம்ராட் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தர ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, துப்புரவு மேற் பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாண்டி, சுகாதார ஆய்வா ளர்கள், கிராம செவிலியர்கள், களப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story