காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Sept 2021 11:17 PM IST (Updated: 8 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருேக காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திட்டச்சேரி;
திருமருகல் அருேக காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெர் விசாரணை நடத்தி வருகிறார். 
காதல் திருமணம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் . இவருடைய மகன் மணிகண்டன் (வயது25). இவர் கோவில் சிலைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி அகரகீரங்குடி பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் மகள் வினிதா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன்- மனைவி இருவரும் தண்டாளம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தனர். மணிகண்டன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். 
தீக்குளித்து தற்கொலை
சம்பவத்தன்று வினிதா வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வினிதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீக்காயமடைந்த வினிதா சம்பவ இடத்திலேயே   பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இரணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று வினிதாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வினிதா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 
உதவி கலெக்டர் விசாரணை 
வினிதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திருமணமாக 3 ஆண்டுகளில் இளம்பண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story