வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:
வாலிபர் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கல்லுக்குண்டு குளக்கரைப்பகுதியை சேர்ந்தவர் துப்பாக்கி முருகன். இவரது மகன் விஜய் என்கிற செல்வகணபதி (வயது 24). கடந்த மாதம் 28-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிலர் செல்வகணபதியை அரிவாளால் வெட்டியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்து விசாரித்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு ஆகியோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில், 9 பேர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி அம்பேத்கர் நகர், கலிபுல்லா நகர் பகுதிகளை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர், அம்பேத்கர் நகர் தம்பியப்பன் மகன் பசுபதி (27) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நல்ல கண்ணன் முன் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி 17 வயதுடைய 2 சிறுவர்களையும் புதுக்கோட்டை சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கவும், பசுபதியை அறந்தாங்கி சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story