அரசு பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி


அரசு பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 Sept 2021 12:24 AM IST (Updated: 9 Sept 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே அரசு பஸ்சும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே அரசு பஸ்சும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு, தஞ்சையில் இருந்து அம்மாப்பேட்டை, அவளிவநல்லூர் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் நேற்று வழக்கம்போல் தஞ்சையில் இருந்து அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தது.  
அவளிவநல்லூர் அருேக சென்றபோது எதிரே கும்பகோணம் அருகே திருபுவனம் மருத்துவ தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண்குமார் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
வாலிபர் பலி
இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story