திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியர் தற்கொலை
திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளனம்பட்டி:
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணூரை சேர்ந்தவர் ஐஜின்ராஜ் (வயது 47). இவர் திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் சிறுமலை பிரிவு அருகே உள்ள தனியார் காம்ப்ளக்சில் அறை எடுத்து தங்கி, பணிக்கு சென்று வந்தார். ஐஜின்ராஜூவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிட அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஐஜின்ராஜ் நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்துகொண்ட ஐஜின்ராஜூவுக்கு மரிய வசந்தா (45) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story