ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அனைத்து அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு அனைத்து அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கடந்த 1.7.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தியும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தினை மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராமன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சிவபெருமான் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தியாகப்பன், மாரிக்கனி, அய்யாச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் சங்க பொருளாளர் தங்கப்பழம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story