இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது


இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 2:10 AM IST (Updated: 9 Sept 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பாபூர் காலனி தெருவை சேர்ந்த முருகேசனின் மனைவி மகாதேவி(வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(26). மகாதேவியின் வீட்டின் அருகே வெங்கடேசன் வீடு கட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது நடந்து செல்லும் பாதையை விட்டு, வீடு கட்டும்படி வெங்கடேசனிடம் மகாதேவி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த வெங்கடேசனின் தாய் பூபதி, தந்தை ராமசாமி ஆகியோரும் மகாதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் வெங்கடேசன் மகாதேவியை திட்டி, தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகாதேவியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து பூபதி, ராமசாமியை தேடி வருகிறார்கள்.

Next Story