மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் பலி + "||" + The old man kills the corona

கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும்  புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 92 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 79 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 150 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் பெரம்பலூர் மாவட்டத்தில் 918 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 955 பேருக்கும் வர வேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 3,011 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 4,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.95 லட்சமாக உள்ளது.
3. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
இந்தியாவில் நேற்று 16 ஆயிரத்து 862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
4. இந்தியாவில் மேலும் 16,862- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 49- பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,219- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.