கடை உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் மீது வழக்கு


கடை உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Sept 2021 2:10 AM IST (Updated: 9 Sept 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

கடை உரிமையாளரை தாக்கிய 2 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமம் வெட்டித்தெரு பகுதியில் ராமலிங்கம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு முன்பாக 2 சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அவர்களை ராமலிங்கம் விலக்கி விட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் ராமலிங்கத்தை திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story