பரமக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
பரமக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 11-ந் தேதி மூட வேண்டும் கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்,
பரமக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 11-ந் தேதி மூட வேண்டும் கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்டாக் கடைகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும், முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும், பாதுகாப்பின் ஒரு பகுதியாக 11-ந் தேதி ஒரு நாள் மட்டும் ராஜபாளையம் தாலுகா முதல் திருச்சுழி தாலுகா வரையிலும், சாத்தூர் மற்றும் சிவகாசி தாலுகா முதல் திருச்சுழி தாலுகா வரையிலும், விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கூடங்கள், மதுக்கூடங்கள் மற்றும் மதுபான கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
நடவடிக்கை
மேலும் மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மற்றும் மதுபான கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story