சேலத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்,
என்ஜினீயர் தற்கொலை
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). என்ஜீனியரான இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கோபித்து கொண்டு சுரேஷ் சேலத்துக்கு வந்தார். இங்கு அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியை பிரிந்து வந்த சோகத்தில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்ப தகராறு
சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story