நெல்லை சந்திப்பில் பூக்கள் விலை கடும் உயர்வு


நெல்லை சந்திப்பில் பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 9 Sept 2021 3:10 AM IST (Updated: 9 Sept 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் பூக்கள் விலை கடும் உயர்வு

நெல்லை:
நெல்லை சந்திப்பில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பூக்கள் விலை
ஆவணி மாதத்திற்கான திருமண முகூர்த்தம் நேற்று தொடங்கி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) உள்ளது. இதனால் அதிக அளவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தியும் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,500-க்கும், சம்பங்கி ஒரு கிலோ ரூ.400-க்கும் விற்பனையானது.
ரோஸ் 250 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், கோழிப்பூ 100 ரூபாய்க்கும், வாடாமல்லி 80 ரூபாய்க்கும், கேந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெங்களூரு நந்தியாவட்டை மொட்டு நேற்று முன்தினம் கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. நேற்று அதன் விலை உயர்ந்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

Next Story