ெரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை
ெரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வாழவந்தாள்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). இவர் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ராமச்சந்திரன் நேற்று அதிகாலை கொல்லம் சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராமச்சந்திரனுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story