3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:31 AM GMT (Updated: 2021-09-09T13:01:27+05:30)

திருவள்ளூரில் உள்ள போக்குவரத்து பணிமனை வளாகம் முன்பு நேற்று 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் ஜெயராமன் விளக்க உரையாற்றினார்.

இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு நிலுவைத் தொகையை நிபந்தனை எதுவுமின்றி உடனடியாக வழங்க வேண்டும், அனைத்துத்துறை ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story