தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 10 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 10 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2021 11:47 AM GMT (Updated: 2021-09-09T17:17:31+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 114 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story