மெகா தடுப்பூசி முகாம்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்


மெகா தடுப்பூசி முகாம்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2021 7:29 PM IST (Updated: 9 Sept 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

மெகா தடுப்பூசி முகாம்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி:
தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்கள் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "இந்த மெகா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் 18 வயது பூர்த்தியான அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை கண்டறிந்து அவர்களை தடுப்பூசி முகாமுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்களின் பங்களிப்பை முழுமையாக அளித்து தங்கள் பகுதியில் 100 சதவீதம் தடுப்பூசி முகாமை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இந்த பணியை முழுமையாக மேற்கொள்ளும் ஊராட்சி மன்ற தலைவர்களின் வீடுகளுக்கு நான் நேரடியாக வந்து தங்களுடன் உணவருந்துகிறேன்" என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story