விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் கனகு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் தும்பலப்பட்டி உபரிநிலம் தொடர்பான வழக்கை துரிதப்படுத்த வேண்டும், தும்பலப்பட்டி, புளியம்பட்டி கிராமங்களில் உச்சவரம்பு நிலங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், தும்பலப்பட்டியை சேர்ந்த ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story