மாவட்ட செய்திகள்

840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு + "||" + 840 kg of tobacco products handed over to the court

840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு

840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு
பெங்களூருவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்: 

மும்பை-நெல்லை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 12-ந்தேதி காலை 7 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. அந்த ரெயிலில் கொண்டு வரப்பட்ட பார்சல்களை இறக்கி, அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது ஒரே நபருக்கு பெங்களூருவில் இருந்து 19 மூட்டைகள் வந்து இருந்தன. அவற்றை வாங்குவதற்கு ஒருவர் வந்திருந்தார். இதற்கிடையே மூட்டைகளில் இருந்து ஒருவித வாசனை வீசவே, அதிகாரிகள் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது 19 மூட்டைகளிலும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 

மேலும் அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் மூட்டைகளை வாங்க வந்த நபரும் நைசாக தப்பிவிட்டார். இதையடுத்து புகையிலை பொருட்களை, ரெயில்வே அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 வாரங்களாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் 19 மூட்டைகளில் இருந்த 840 கிலோ புகையிலை பொருட்களை, திண்டுக்கல் ரெயில்வே போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 


இதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்களை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திண்டிவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
2. திருக்கோவிலூர் அருகே ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3. மேல்மலையனூர் அருகே புகையிலை பொருட்களை எடுத்து வந்தவர் கைது
மேல்மலையனூர் அருகே புகையிலை பொருட்களை எடுத்து வந்தவர் கைது செய்யப்பட்டாா்.
4. புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
மத்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.